அநுரகுமார திசாநாயக்கவிற்கு வாழ்த்து தெரிவிக்கும் மலையக தலைவர்கள் மீது விமர்சனம்
ஜனாதிபதி தேர்தலின் போது, மலையக மக்களை திசை திருப்பவதற்காக பொய்யான போலி பிரசாரங்களை செய்த மலையக அரசியல் கட்சிகளும் தலைவர்களும் இன்று அநுரகுமார திசாநாயக்கவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருவது மிகவும் வேடிக்கையானது என மலையக மக்கள் சக்தியின் தலைவர் இராமன் செந்தூரன் தெரிவித்துள்ளார்.
கொட்டகலையில் நேற்று (24.09.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க, அதிகபடியான வாக்குகளை பெற்று இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட 9ஆவது ஜனாதிபதியாக பதிவிப்பிரமாணம் செய்துள்ளார்.
மலையக மக்கள் சக்தி
அவருக்கு மலையக மக்கள் சக்தியும் மலையக மக்களும் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமையடைகின்றோம்.
எனினும், மலையகத்தை பொறுத்த வரையில் குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் மலையக மக்கள் சக்தியின் வேண்டுகோளினை ஏற்று பெறுவாரியான மக்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு அதிகபடியான வாக்குகளை அளித்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |