சுமந்திரன், சாணக்கியனால் கூட்டமைப்பிற்கு ஏற்பட்ட நிலை: விநாயகமூர்த்தி முரளிதரன் காட்டம்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரனும் சாணக்கியனும் எப்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் வந்தார்களோ அன்றே அந்த கட்சி வலுவிழக்கத் தொடங்கியது என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று (10.10.2024) நாடாளுமன்றத் தேர்தலுக்கு வேட்புமனுக்களை தாக்கல்செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
“தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருடன் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினை உருவாக்குவதில் நானும் பங்குவகித்துள்ளேன். அந்தவேளையில் நாங்கள் தமிழர்களின் உரிமை தொடர்பாகவும் தமிழர்களின் தேசியம் தொடர்பிலுமே பேசவேண்டும் என்று கூறியிருந்தோம்.
அதனை கடந்த காலத்தில் செய்துவந்தார்கள்.ஆனால் காலப்போக்கில் மிகவும் கேவலமான தலைமைகள் அதற்குள் வந்து இலஞ்சங்கள் பரிமாறப்பட்டு கேவலமான விடயங்கள் செய்யப்படுகின்றன” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 11 மணி நேரம் முன்
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri