தமிழரசுக் கட்சியை மலினப்படுத்தும் கஜேந்திரகுமார்! எழுந்துள்ள விமர்சனம்

Colombo Ilankai Tamil Arasu Kachchi Gajendrakumar Ponnambalam
By Rakesh Jan 04, 2025 11:28 AM GMT
Report

தமிழரசுக் கட்சியை மலினப்படுத்துவது தான் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் ஒரே வேலை எனவும் அவருடன் பேச்சுவார்த்தை வேண்டாம் எனவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவர் சி.இரத்தினவடிவேல் தெரிவித்துள்ளார்.

கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைத்தியர் ப.சத்தியலிங்கத்துக்கு எழுதிய கடிதம் ஒன்றிலேயே அவர் இந்த விடயங்களைத் தெளிவுப்படுத்தியுள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும்,

2015 முதல் 2020ஆம் ஆண்டுவரையான காலப் பகுதியில் 84 தடவைகள் அனைத்துக் கட்சிகளும் கூடி ஓர் அரசமைப்பு வரவைத் தயாரித்தன.

யாழ். போதனா வைத்தியசாலையில் மேலும் இரண்டு மரணங்கள் பதிவு

யாழ். போதனா வைத்தியசாலையில் மேலும் இரண்டு மரணங்கள் பதிவு

தேர்தல் வாக்குறுதி

அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக தமிழரசுக் கட்சி முழு மூச்சில் ஈடுபட்டு சமஷ்டி அம்சங்களைக் கொண்ட பல முன்னேற்றகரமான அம்சங்களை உள்ளீடு செய்ய வைத்தது.

ஐந்து ஆண்டு இடைவிடா முயற்சியின் பின்னர் இறுதி வரைவில் சம்பந்தன் ஐயா, அடைக்கலநாதன், சித்தார்த்தன் ஆகியோர் அதிலுள்ள சிறந்த விடயங்களைக் கருத்திற்கொண்டு கையொப்பமிட்டனர்.

தமிழரசுக் கட்சியை மலினப்படுத்தும் கஜேந்திரகுமார்! எழுந்துள்ள விமர்சனம் | Criticism On Gajendrakumar Ponnambalam

தற்போது ஆட்சியிலிருக்கும் தரப்பும் அதனை ஏற்றுக்கொண்டது. அதனை ஏற்று மேலும் திருத்தங்கள் செய்து புதிய அரசமைப்பைக் கொணரப்போவதாக இந்த அரசு தனது தேர்தல் வாக்குறுதியாக மக்களுக்கு வழங்கியுள்ளது. இதில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கட்சி தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை.

இப்போது இந்த ஐந்து ஆண்டு எமது கட்சியினதும் தலைவர்களினதும் முயற்சியை செல்லாக்காசாக்க அவர் முயற்கின்றார். தவிரவும், எப்போதுமே தமிழர் நன்மைகளை விட தமிழரசுக் கட்சியை மலினப்படுத்துவதையே மேலான செயற்பாடாகக் கொண்டிருக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்த முன்னேற்றகரமான அரசமைப்பு வரைவைக் குறை கூறினார்.

கபடத் திட்டம்

அதற்கு முக்கிய காரணம் தமிழரசின் பங்களிப்புடன் வரும் இந்த ஏற்பாடுகளை எதிர்க்க வேண்டுமே என்பதே அன்றி வேறேதும் இல்லை.

இந்தப் பின்னணியில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இப்போது இதனைப் புறந்தள்ளி தான் முன்பு முன்நிலைப்படுத்திய விக்னேஸ்வரன் தலைமையிலான ஆலோசனைகளை முன்தள்ள முற்படுகின்றார்.

தமிழரசுக் கட்சியை மலினப்படுத்தும் கஜேந்திரகுமார்! எழுந்துள்ள விமர்சனம் | Criticism On Gajendrakumar Ponnambalam

இந்த யோசனைகளை தமிழரசு எப்போதுமே ஏற்றுக்கொண்டதில்லை. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இப்போது தமிழரசுக் கட்சிக்குப் பெயர் போய்விடக்கூடாதே என்ற எண்ணத்தில் தன்னை முன்னிலைப்படுத்தும் ஒரு கபடத் திட்டத்துக்குத் தமிழரசுக் கட்சியை உடந்தையாக்கப் பார்க்கின்றார்.

தமிழரசுக் கட்சியை எப்போதுமே மலினப்படுத்தும் செயற்பாடுகளைச் செய்து வந்தவர் இப்போது அந்தக் கட்சியிலுள்ளதாகக் கருதப்படும் உள்ளக முரண்பாடுகளை மேலும் விரிவுபடுத்தும் உள்நோக்குடன் கட்சியைப் புறந்தள்ளி நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனுடன் பேச முற்படுகின்றார் - என்றுள்ளது.

முல்லைத்தீவு பாடசாலையில் நிதி சேகரிப்பு விவகாரம்: தேசிய கணக்காய்வு நிறுவனம் நடவடிக்கை

முல்லைத்தீவு பாடசாலையில் நிதி சேகரிப்பு விவகாரம்: தேசிய கணக்காய்வு நிறுவனம் நடவடிக்கை

வடக்கு மாகாணத்தில் சீரான பரம்பல் இல்லை: ஆளுநர் வெளிப்படை

வடக்கு மாகாணத்தில் சீரான பரம்பல் இல்லை: ஆளுநர் வெளிப்படை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US