கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு மீண்டும் கிடைத்த அங்கீகாரம்
ஃபோர்ப்ஸ் (Forbes) வெளியிட்டுள்ள அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்களின் பட்டியலில் போர்த்துக்கல் காற்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Crisitiano Ronaldo) நான்காவது முறையாக முதலிடத்தை பிடித்துள்ளார்.
முன்னதாக, கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி அரேபியாவின் காற்பந்து கழகமான அல் நஸாரால் (Al Nassar) வாங்கப்பட்ட போது, இதே பட்டியலில் முதலிடத்தினை பிடித்திருந்தார்.
39 வயதான ரொனால்டோ, கடந்த 12 மாதங்களில் 136 மில்லியன் அமெரிக்க டொலர்களில் இருந்து 260 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை சம்பாதிருக்க்கலாம் என ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.
மிக அதிக தொகை
அத்துடன், ஸ்பெயின் நாட்டு கோல்ஃப் வீரர் ஜோன் ரஹாம் (Jon Rahm) இரண்டாம் இடத்தை பிடித்துள்ளதோடு ரொனால்டோவின் போட்டியாளர் லியோனல் மெஸ்ஸி மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.
அதேவேளை, சவுதி அரேபியாவின் காற்பந்து தொடரில் நுழைந்த பின்னர், பிரேசிலின் நெய்மார் மற்றும் பிரான்ஸின் பென்ஸமா ஆகியோரும் ஃபோர்ப்ஸின் முதல் 10 இடங்களுக்குள் பிரவேசித்துள்ளனர்.
மேலும், ஃபோர்ப்ஸ் அறிக்கையின் படி முதல் 10 இடங்களை பிடித்த விளையாட்டு வீரர்களும் ஒன்றிணைந்து 1.38 பில்லியன் அமெரிக்க டொலர்களை வரி செலுத்த முதலான கொடுப்பனவாக பெற்றுள்ளனர்.
இது, இது வரை பதிவு செய்யப்பட்ட மிக அதிக தொகை என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |