கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட பல அரசாங்க வைத்தியசாலைகளுக்கு மற்றுமொரு நெருக்கடி நிலை
கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட பல அரசாங்க வைத்தியசாலைகளுக்கு மற்றுமொரு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
மின்சாரம் மற்றும் பராமரிப்பு கட்டணங்களை செலுத்த தவறியதன் காரணமாக இந்த வைத்தியசாலைகளில் மின்சாரம் தடைப்படும் அபாயம் இருப்பதாக கொழும்பின் ஊடகம் ஒன்று தகவல் தெரிவித்துள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலை, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை, பேராதனை போதனா வைத்தியசாலை, கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலை, முல்லேரியா தொற்று நோய் வைத்தியசாலை உட்பட பல அரச வைத்தியசாலைகளில், கடந்த கால நிலுவைத் தொகையை செலுத்தாமை காரணமாக 'சிவப்பு' அறிவிப்பை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலைகளின் மின்சார கட்டண விபரம்
பேராதனை போதனா வைத்தியசாலை, மன்னார் மற்றும் முல்லேரியா வைத்தியசாலைகளின் மின்சார நிலுவைகள் முறையே 70 மில்லியன், 14 மில்லியன் மற்றும் 2 மில்லியன் ரூபாய்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கொழும்பு நகரில் உள்ள ஆறு வைத்தியசாலைகளில் 159 மில்லியன் ரூபாய்க்கான பயன்பாட்டு மற்றும் பராமரிப்பு நிலுவைத் தொகையை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு, ஜூலை 20 திகதியிட்ட கடிதம் மூலம், சுகாதார அமைச்சின் செயலாளருக்கு மின்சாரசபை கடிதம் அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 22 மணி நேரம் முன்

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri
