நாட்டில் ரூபா இருப்பிற்கும் நெருக்கடி! அமைச்சர் வழங்கும் தகவல்
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் கொள்வனவிற்கு டொலர் நெருக்கடியை எதிர்க்கொண்டுள்ள நிலைமையில் தற்போது ரூபா இருப்பிற்கும் நெருக்கடி நிலைமை தோற்றம் பெற்றுள்ளதாக என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
அத்துடன் எரிபொருளின் விலையை அதிகரிக்காவிடின் எரிபொருள் கொள்வனவிற்கான ரூபாவை திரட்டிக்கொள்வதில் பாதிப்பு ஏற்படும்.
எரிபொருள் விநியோகத்தில் பாரிய நட்டத்தை கூட்டுத்தாபனம் எதிர்கொள்கிறது. எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் பலமுறை கோரிக்கையை முன்வைத்துள்ளது.
தற்போதைய நிலைமையில் எரிபொருளின் விலையை அதிகரிக்காவிடின் எரிபொருள் இறக்குமதிக்கான ரூபாவை கூட திரட்டிக்கொள்ள முடியாத நிலைமை தோற்றம் பெறும் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை எரிபொருள் விலையை அதிகரிக்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும், தற்போதைய நிலைமையில் எரிபொருளின் விலையை அதிகரிப்பது கட்டாயமானதாகும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் சர்வதேச ஊடாக சந்திப்பில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.