முட்டை விலை உயர்வால் ஏற்பட்டுள்ள நெருக்கடி! - மக்கள் விசனம்
முட்டை மற்றும் முட்டை ரொட்டியின் விலை உயர்வால் நுகர்வோர் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“முட்டையின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதாக மக்கள் கூறுகின்றனர். இந்த சூழ்நிலையில், ஒரு வெள்ளை முட்டை 22 ரூபாய்க்கும், ஒரு சிவப்பு முட்டை 23 ரூபாய்க்கும், ஒரு சிறிய வெள்ளை முட்டை 20 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
முட்டையின் விலை அதிகரிப்பால், ஒரு முட்டை ரொட்டியின் விலை 60 முதல் 65 ரூபாய் வரை இருப்பதாகவும், இந்த சூழ்நிலையில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.
இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முட்டை வியாபாரிகள், மொத்த முட்டை விலை உயர்வால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையில் அண்மைய நாட்களில் சில அத்தியாவசிய பொருட்கள் விலை சடுதியாக உயர்ந்துள்ளது. குறிப்பாக சீனி, பால்மா, கோதுமை உள்ளிட்ட பொருட்களில் விலை உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
