ராகமை வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி! கோவிட் சடலங்கள் நிரம்பியுள்ளதாக தகவல்
ராகமை போதனா வைத்தியசாலையில் தகனம் செய்ய முடியாமல் கோவிட் சடலங்கள் நிரம்பி காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 20 சடலங்கள் இவ்வாறு தகனம் செய்ய முடியாமல் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.
குறித்த சடலங்கள் அனுப்பி வைக்கப்படவுள்ள தகன மேடைகள் செயலிழந்து உள்ளதால் குறித்த உடலங்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இது ஒரு பிரச்சினைக்குரிய விடயம் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கையில் இதுவரையில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,017ஆக உயர்ந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் 98 பேர் கோவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாகவும், இதில் 47 ஆண்களும், 51 பெண்களும் அடங்குவதாக அரச தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.