நாடளாவிய ரீதியில் பதிவான குற்றச்செயல்களும் கைது நடவடிக்கைகளும்
கண்டி - பல்லாகலைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் சிறைச்சாலையிலிருந்து தப்பியோடியுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஆறுமாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, பல்லேகல திறந்தவெளி சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்ட கைதி ஒருவரே நேற்றைய தினம் (21.03.2023) இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.
ஹெரோயின் போதைப் பொருளை சம்பவம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பின்னர் புணர்வாழ்விற்காக அவருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த கைதி மே 28ஆம் திகதி விடுதலை பெற இருந்த நிலையில் அதற்குள்ளாக அவர் இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
செய்தி-எரிமலை
வவுனியா - போதைப் பொருளுடன் ஒருவர் கைது
வவுனியா - இறம்பைக்குளம் பகுதியில் 10கிராம் 470மில்லிகிராம் கெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இறம்பைக்குளம் பகுதியில் குறித்த நேற்றைய தினம் (21.03.2023) விசேட சோதனையை முன்னெடுத்த போது குறித்த நபரின் உடைமையில் இருந்து கெரோயின் கைப்பற்றப்பட்டதுடன், குறித்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா தேக்கத்தைப் பகுதியினை சேர்ந்த 44வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவர்.
மேலதிக விசாரணையின் பின் குறித்த நபரை வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
செய்தி-திலீபன்
செருப்புக்குள் 70 சுருட்டு
செருப்புக்குள் 70 சுருட்டுகளை மறைத்து அகுனுகொலபலஸ்ஸ சிறைச்சாலைக்குக் கொண்டு செல்ல முற்பட்ட கைதியொருவர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறைச்சாலைகளில் இடநெருக்கடி காரணமாக வெற்றிடங்களில் இருந்து அழைத்து வரப்படும் கைதிகள் மற்றும் நீதிமன்ற, மருத்துவ நடவடிக்கைகளுக்காக வெளியில் சென்று திரும்பும் கைதிகளை அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கடுமையான சோதனையின் பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
அங்குணபெலகொலஸ்ஸவில் விசேட அதிரடிப்படையினர் அதற்காகக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதன் பிரகாரம் நேற்றைய தினம் (21.03.2023) அங்குனகொலபலஸ்ஸ சிறைச்சாலையின் அதிகாரிகள் கைதிகள் மற்றும் ஊழியர்களைச் சோதனையிட்ட போது, சிறைச்சாலைக்குள் இந்த சுருட்டுகளைச் செருப்பில் மறைத்துக் கொண்டு செல்ல முயன்ற கைதியொருவர் மாட்டிக் கொண்டுள்ளார்.
இதனையடுத்து குறித்த கைதியை மேலதிக விசாரணைகளுக்காகக் கைது செய்துள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
செய்தி-அனாதி
கோறளைப்பற்றில் மாட்டினை இறைச்சி
கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பொத்தானை மூக்குறம்குளம் பகுதியில் பண்ணையாளர் ஒருவரின் எருமை மாடுகளை மாட்டுப் பட்டிக்குள்ளேயே இறைச்சிக்காக வெட்டிய சம்பவம் பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம் (21.03.2023) எருமை மாடுகளைக் கட்டி விட்டு அவரது வீட்டுக்குச் சென்று காலையில் பட்டிக்கு வந்து பார்த்தபோது இனம் தெரியாதவர்களால் இறைச்சிக்காக மாட்டுப் பட்டிக்குள்ளேயே எருமை மாட்டுக் கன்றுகளை இறைச்சிக்காக வெட்டப்பட்டுக் காணப்பட்டுள்ளது.
இது தொடர்பில் எருமை மாட்டுப் பட்டி உரிமையாளரால் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
செய்தி-எரிமலை

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

காணிக் கட்டளைச் சட்டங்களில் திருத்தம் - ரணில் வகுக்கும் வியூகம் 23 மணி நேரம் முன்

குடும்பத்துடன் குதூகளிக்கும் கோபி...! ராதிகா பேரைக் கேட்டு அலறி அடித்து ஓட்டம்! சூடு பிடிக்கும் காட்சி Manithan

கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்! நிரூபர்களுக்கு அளித்த நக்கலான பதிலால் சர்ச்சை Manithan

ஜீ தமிழ் சரி கம பா நடுவர் கார்த்திக்கின் மனைவி, பிள்ளைகளை பார்த்துள்ளீர்களா.. அழகிய குடும்ப புகைப்படம் Cineulagam

மேகன் உடனான திருமண உறவில் ஹரி நீடிக்க காரணம் இது தான்: அரச குடும்ப சேவகர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் News Lankasri

போலீஸ் ஸ்டேஷனில் கதிர்.. என்ன செய்ய போகிறார் மூர்த்தி, பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த வாரம் ப்ரோமோ Cineulagam
