நண்பரை சந்திக்க சென்ற தனியார் வங்கி நிர்வாக அதிகாரிக்கு நேர்ந்த துயரம்!
மொரட்டுவ மோல்பே பகுதியைச் சேர்ந்த 24 வயது தனியார் வங்கி நிர்வாக அதிகாரியின் தங்க நகையையும் கைப்பேசியையும் கொள்ளையிட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
கடந்த 31ஆம் திகதி, குறித்த தனியார் வங்கி நிர்வாக அதிகாரி, சமூக ஊடக செயலி மூலம் அடையாளம் கண்ட ஒருவரை சந்திக்க சென்றபோது, நான்கு பேர், குறித்த வீட்டுக்குள் புகுந்து, வங்கி அதிகாரியின் ஒரு பவுண் தங்க நகையையும் கைப்பேசியையும் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
மேலதிக விசாரணை
பின்னர் கைப்பேசி மூலம் அவரது வங்கிக் கணக்கிலிருந்து 20,000 ரூபாவை தங்களது கணக்கிற்கு மாற்றியுள்ளனர்.
முறைப்பாட்டின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், மொரட்டுவை, லுனாவ, இலட்சபதி மற்றும் கெசெல்வத்த பகுதிகளைச் சேர்ந்த 18, 19 மற்றும் 25 வயதுடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருடப்பட்ட தங்க நகைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. சம்பவத்தில் ஈடுபட்ட மற்றொரு சந்தேகநபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.



