பிரித்தானியாவில் கொடூரம்: வீடொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட தாய் மற்றும் மகன்
பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ்ஷயரிற்கு(Cambridgeshire) உட்பட்ட வீடொன்றில் இருந்த தாய் மற்றும் மகன் ஆகிய இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மார்ச்(March) நகரின் நோர்வுட் சாலையில் உள்ள வீடு ஒன்றில் இருந்து நேற்றையதினம்(08.01.2025) குறித்த சடலங்கள் இரண்டும் மீட்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீண்ட நேரமாக தாய் மற்றும் மகன் இருவரும் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அயல் வீட்டுக்காரர்கள், பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார், இரண்டு சடலங்களை மீட்டு இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
சிறிய சந்தை நகரமான மார்ச் சுமார் 22,000 மக்கள் தொகையுடன் கேம்பிரிட்ஜ்ஷயரின் ஐல் ஆஃப் எலி(Isle of Ely) பகுதியில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
