தந்தையை கொலை செய்து உடலை தீ வைத்து எரித்த மகன்! விசாரணையில் வெளியான காரணம் (Video)
நாளுக்கு நாள் பல்வேறு குற்றச்செயல்கள் நாடளாவிய ரீதியில் பதிவாகி வருகின்றது.
ஹோகந்தர-வித்யாராஜ மாவத்தை பகுதியிலுள்ள வீடொன்றுக்கு முன்பாக தாய் மற்றும் தந்தையை மண்வெட்டி மற்றும் கத்தியால் தாக்கி, தந்தையின் உடலை தீ வைத்து எரித்து கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹோகந்தர-சிங்கபுர பகுதியில் வைத்து கடந்த சனிக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் ரஞ்சித் சேனாரத்ன என்ற 57 வயதான முச்சக்கரவண்டி சாரதியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
போதைப்பொருளுக்கு அடிமையாகி புனர்வாழ்வளிக்கப்பட்டிருந்த மகனை தாய் அண்மையில் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளதாகவும், தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கடந்த வாரத்தில் இடம்பெற்ற, குற்றச் செயல்கள் அதனுடன் தொடர்புடைய விசாரணைகள், கைதுகள், காவல்துறை சுற்றிவளைப்புகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் உள்ளிட்ட தகவல்களை தொகுத்து வழங்கும் குற்றப் பார்வை நிகழ்ச்சி இதோ,
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam