மூத்த சகோதரனை குத்திக் கொன்ற இளைய சகோதரன்!
பொலன்னறுவை- பெலத்தியாவ பகுதியில் இளைய சகோதரனால் கத்தியால் குத்தப்பட்டு மூத்த சகோதரன் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று இரவு (06.07.2023) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இருவருக்கும் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து மூத்த சகோதரனை இளைய சகோாதரன் கத்தியால் குத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மனநலம் பாதிப்பு
படுகாயமடைந்த மூத்த சகோதரன் தெஹியத்தகண்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விசாரணையில் இளைய சகோதரர் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது தெரியவந்துள்ளது.
சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளை மானம்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.