கஜேந்திரகுமாருக்கு எதிரான அர்ச்சுனாவின் கடும் விமர்சனம்! இடத்தை மாற்றுமாறு சபையில் குழப்பம்
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது நாடாளுமன்ற சிறப்புரிமைகள் மீறும் வகையில் செயற்பட்டுள்ளார் என்று அர்ச்சுனா ராமநாதன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம்(7) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
காரசாரமாக கூறிய பல கருத்துக்கள்
அவர் மோசமான வார்த்தை பிரயோகங்களில் தன்மை பேசியதாகவும் மேலும் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து அதற்கெதிராக நடவடிக்கை எடுக்குமாறும், அத்தோடு தனது பக்கத்து ஆசனத்தில் அமர்ந்திருக்கும் அவரை மாற்றுமாறும் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் சபாநாயகரை கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர்,
அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் எனது தாய் தொடர்பில் மோசமான வார்த்தைகளில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பேசினார்.
ஒரு சாதாரண மனிதர் கூட அவ்வாறான மோசமான வார்த்தைகளில் கதைக்க மாட்டார்கள். மேலும் எனது தாயை நான் கேவலமாக நடத்தியதாகவும் ஆங்கிலத்தில் பல மோசமான வார்த்தைகளை பிரயோகித்தார்.
வேண்டத்தகாத வார்த்தைகள்
நாடாளுமன்றத்தில் எனது பெயரை விழித்து தனது கதிரைக்கு வலப்பக்கத்தில் இருப்பதாகவும் தமிழில் வேண்டத்தகாத வார்த்தைகளை பிரயோகித்துள்ளார்.
இவ்வாறான ஒரு நபர் நாடாளுமன்ற ஒழுக்காற்று சபையில் தொடர்ந்து பதவி வகிப்பது தொடர்பில் ஐயப்பாடு ஏற்பட்டுள்ளது. இது ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமை மீறல் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் மக்களின் கலாசாரம் தொடர்பானதாகும்.

ஆதலால் எனது கதிரையின் வலப்பக்கத்தில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை வேறு இடத்திற்கு மாற்றவும். அவர் தொடர்ந்து எனதருகில் இருப்பதால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு எனக்கு பொறுப்பு கூட முடியாது.
இவ்வாறான ஒழுக்கமற்ற பண்பற்ற ஒரு நபர் நாடாளுமன்ற சிறப்புரிமை குழுவில் இருக்க முடியாது என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri