கொழும்பில் மகளை கேலி செய்த இளைஞரை கொலை செய்த தந்தை!
இளைஞர் ஒருவர் தனது மகளை கேலி செய்ததால் ஆத்திரமடைந்த தந்தை, குறித்த இளைஞரை மார்பில் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இளைஞரை கொலை செய்த நபர் நேற்று பொலிஸில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
கொழும்பு, கிராண்ட்பாஸ் - நவகம்புர பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய பரமானந்தன் தினேசன் என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சந்தேகநபர் கொலைக்கு யன்படுத்திய கூரிய கத்தி, அவர் அணிந்திருந்த ஆடைகள் மற்றும் அவருக்கு அடைக்கலம் கொடுத்த நண்பரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மூன்று பிள்ளைகளின் தந்தை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலதிக தகவல்-ராகேஷ்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக News Lankasri
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியாக நடிக்கும் நடிகை ஸ்ரீஜா தனது கணவருடன் எடுத்த அழகிய போட்டோஸ் Cineulagam
சோம்பேறித்தனமாக இருக்கும் 4 ராசியினர் யார்னு தெரியுமா? உங்களது ராசியும் இருக்குதானு பாருங்க Manithan