வெளிநாடொன்றில் பொலிஸாரிடம் சிக்கிய இலங்கை குற்றவாளி - மனைவியுடன் தப்பியோட்டம்
இலங்கையின் பாரிய குற்றக் கும்பல் தலைவரான கெஹெல்பத்தர பத்மே மற்றும் அவரது மனைவி மலேசிய பொலிஸ் காவலில் இருந்து தப்பிச் சென்றதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கெஹெல்பத்தர பத்மே, அவரது மனைவி மற்றும் கமாண்டோ சாலிந்த ஆகியோர் 9 ஆம் திகதி மலேசிய பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியிடப்பட்டன.
சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டமையை இலங்கை பொலிஸாரினாலும் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
புலனாய்வு பிரிவு அதிகாரிகள்
பின்னர் குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் குழுவை அந்த நாட்டிற்கும், மற்றொரு அதிகாரிகள் குழுவை தாய்லாந்திற்கும் அனுப்பி அவர்களை மீண்டும் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவர்களை மீண்டும் அழைத்து வரச் சென்ற குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் ஏமாற்றத்துடன் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் உண்மையை கூறிய அரசி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam
