அபாயகரமான நிலையில் சாவகச்சேரி நவீன சந்தைக் கட்டடம்!
சாவகச்சேரி நகரசபையின் நவீன சந்தைக் கட்டடத்தொகுதி இடிந்து விழக்கூடிய அபாயநிலையில் உள்ளதாக நகராட்சி மன்ற உபதவிசாளர் தெரிவித்துள்ளார்.
சாவகச்சேரி நகரசபையின் நவீன சந்தை கட்டட தொகுதி மற்றும் நகர்புறங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள தேவையற்ற விளம்பரப்பலகைகள் தவிசாளரின் ஆலோசனைக்கு அமைவாக உப தவிசாளர் மற்றும் உறுப்பினர் கண்காணிப்பில் நேற்றையதினம் அகற்றப்பட்டது.
அபாயகரமான நிலை
இதன்போது நவீன சந்தைக் கட்டடத்தில் விளம்பரப் பலகைகளை அகற்றிய பொழுது கட்டடத்தின் நடைபாதை பக்கசுவர் இடிந்து விழும் அபாயத்தில் காணப்பட்டுள்ளது. இதனால் குறித்த அபாயகரமான பகுதியும் உபதவிசாளரால் அகற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் கட்டடத்தின் கூரைப்பகுதியில் ஏறி கட்டடத்தின் நிலைமை தொடர்பில் அவதானித்த உபதவிசாளர் கிஷோர் கூரை மீது பொருத்தப்பட்டுள்ள அனைத்து விளம்பரப்பலகைகளையும் அகற்ற உத்தரவிட்டார்.
சந்தைக் கட்டடம்
குறித்த கட்டடம் 1980 ஆம் ஆண்டு கட்டப்பட்ட போதிலும் 2000 ஆம் ஆண்டு யுத்தத்தில் கடுமையான அழிவடைந்து மீள் நிர்மானம் செய்யப்பட்டு மக்கள் பாவணைக்காக திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிலையில் குறித்த கட்டடத்தின் பெரும்பாலான பகுதிகள் உடைந்து விழும் அபாய நிலையில் உள்ளதால் வர்த்தகர்கள், பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு உடனடியாக கட்டடங்கள் திணைக்களத்தின் ஆலோசனையைப் பெற்று இதே அளவுப் பிரமாணம் மற்றும் வடிவமைப்பில் இந்த இடத்திலேயே கட்டடத்தின் நடைபாதை பக்கசுவர் புதிதாக அமைக்கப்பட வேண்டும் என உபதவிசாளர் ஞா.கிஷோர் தெரிவித்துள்ளார்.

குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் உண்மையை கூறிய அரசி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam
