இரு பெண்களுடன் அவுஸ்திரேலியா சென்ற கிரிக்கெட் அதிகாரி
20க்கு 20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கு இடையில் அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இலங்கையின் பிரதான கிரிக்கெட் அதிகாரி ஒருவர் தன்னுடன் இரண்டு பெண்களை அழைத்துச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரச இலத்திரனியல் ஊடகத்தில் பணிப்புரியும் பெண்
இந்த கிரிக்கெட் அதிகாரி உலக கிண்ண போட்டிகளுக்கு இடையில் சர்வதேச கிரிக்கெட் பேரவையுடன் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் கலந்துக்கொள்ளவும் சில போட்டிகளை பார்வையிடவும் அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளார்.
அரச இலத்திரனியல் ஊடக நிறுவனம் ஒன்றில் பணிப்புரியும் பெண் மற்றும் அடையாளம் உறுதிப்படுத்தப்படாத மற்றுமொரு பெண்ணுடன் இந்த அதிகாரி அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளதுடன் இவர்களுக்கான விமான பயணச்சீட்டு மற்றும் ஏனைய செலவுகளை இந்த அதிகாரி ஏற்றுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
உலக கிண்ண போட்டிகளின் போது அவுஸ்திரேலியாவுக்கு சென்ற பல கிரிக்கெட் அதிகாரிகள் தொடர்ந்தும் அங்கு தங்கியுள்ளனர். நாளைய தினம் நடைபெறும் இறுதிப் போட்டியை பார்ப்பதற்காக அவர்கள் அங்கு தங்கியிருப்பதாக கூறப்படுகிறது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 13 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
