50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சுடரொளி விளையாட்டு கழகம் நடாத்திய உள்ளக துடுப்பாட்ட போட்டி
யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி கிழக்கு புதுத்தோட்டம் சுடரொளி விளையாட்டு கழகம் தனது 50 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு தனது கழக வீரர்களுக்கிடையில் நடாத்தப்பட்ட 10 ஓவர் கொண்ட மென்பந்து துடுப்பாட்ட போட்டியின் இறுதி போட்டி நேற்று(07) இடம்பெற்றுள்ளது.
இதில் முதல் நிகழ்வாக வீதியிலிருந்து விருந்தினர்கள் மலர்மாலை அணிவிக்கப்பட்டு விளையாட்டு மைதானம் வரை அழைத்துவரப்பட்டனர்.
பலரும் பங்கேற்பு
நேற்றைய தினம் இடம் பெற்ற ஆண்கள் பிரிவின் இறுதிப் போட்டியில் ரைசிங் ரைற்றஸ் அணியும், வடமராட்சி சுப்பர்கிங் அணியும் மோதின. இதில் வடமராட்சி சுப்பர்கிங் அணி வெற்றியீட்டியது.
இதேவேளை பெண்கள் அணியில் இறுதிப்போட்டியில் சுடரொளி ரேஸ் ஏஞ்சல் அணியும், சுடர்ஸ்ரார் அணியும் விளையாடின.இதில் சுடரொளி ரேஸ் ஏஞ்சல் அணி வெற்றியீட்டியது.
இந்நிகழ்வில் நெல்லியடி கிழக்கு புதுத்தோட்ட மக்கள், அயல் கிராம மக்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










படப்பிடிப்பில் கொண்டாட்டத்தில் இறங்கிய கார்த்திகை தீபம் சீரியல் பிரபலங்கள்... என்ன ஸ்பெஷல், போட்டோஸ் இதோ Cineulagam
