விளைவுகள் மிக மோசமாக இருக்கும்.. ஹமாஸுக்கு ட்ரம்பின் இறுதி எச்சரிக்கை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தனது நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளுமாறு ஹமாஸுக்கு தனது கடைசி எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
போர்நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக் கொண்டதாகவும் டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
போர்நிறுத்தம்
அத்துடன், எல்லோரும் பணயக்கைதிகளை வீட்டிற்கு அனுப்ப விரும்புகிறார்கள்.
இந்தப் போர் முடிவுக்கு வர வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள் எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
எனவே போர்நிறுத்த நிபந்தனைகளை ஹமாஸும் ஏற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது, இதுவே எனது இறுதி எச்சரிக்கை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்றுக்கொள்ளாத விடத்து விளைவுகள் குறித்து நான் ஹமாஸுக்கு எச்சரித்துள்ளேன். இது எனது கடைசி எச்சரிக்கை. மீண்டும் எச்சரிக்க மாட்டேன் என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



