தொழில் வாய்ப்புக்களுக்கு ஏற்ப எம்மை நாம் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்: ஆளுநர் தெரிவிப்பு
எதிர்காலத்தில் இங்கு முதலீட்டாளர்கள் ஊடாக தொழில்வாய்ப்புக்கள் உருவாக்கப்படும்போது அதில் பங்கெடுக்கும் வகையில் எம்மை நாம் தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் குறிப்பிட்டுள்ளார்.
யாழில் இன்று சனிக்கிழமை (07.06.2025) நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “நாங்கள் கல்வி கற்கின்ற காலத்தில் வாய்ப்புக்கள் மிகக் குறைவு. எங்களுக்கு அப்போதிருந்த தெரிவு அரசாங்கத்தின் பல்கலைக்கழகம் மட்டுமே.
தனியார் துறை வேலை வாய்ப்பு
ஆனால் இன்று அப்படியல்ல. இங்கு பல தனியார் கல்வி நிறுவனங்கள் செயற்படுகின்றன. அதன் ஊடாக உயர்கல்வி கற்பதற்கு வாய்ப்புக்கள் கிடைக்கின்றன.
கல்விப்பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் அரசாங்க பல்கலைக்கழகத்துக்கு வாய்ப்புக் கிடைக்காவிட்டால் அன்று வேறு தெரிவு என்பது குறைவாக இருந்தது.
ஆனால் இன்று பல தெரிவுகள் - வாய்ப்புக்கள் உங்கள் முன்னால் இருக்கின்றன. இன்று வேலை வாய்ப்பு என்பது சவலானதாக உள்ளது.
அரசாங்க வேலை வாய்ப்பாக இருக்கலாம், தனியார்துறை வேலை வாய்ப்பு இருக்கலாம் எதுவென்றாலும் அவை சவாலானதாகவே இருக்கின்றன.
ஆட்சிமாற்றத்தின் பின்னர் முதலீட்டாளர்கள் வடக்கை நோக்கி முதலிடுவதற்கு வருகின்றார்கள். வெகு விரைவில் இங்கு தொழிற்சாலைகள் உருவாகும்.
வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றேன். இன்று இங்கு சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளும் உங்களின் எதிர்காலம் சிறக்க வாழ்த்துகின்றேன், என்றார்.





காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

அமெரிக்காவில் திருட்டு சம்பவத்தில் கையும் களவுமாக சிக்கிய இந்திய பெண்: வெளியான வீடியோ காட்சி! News Lankasri

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri
