குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின் உடல் தகனம் செய்யப்பட்டது
யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின் இறுதிக்கிரிகைகள் நல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் அமைதியான முறையில் இடம்பெற்று, பூதவுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
மாப்பாண முதலியார் கடந்த வாரம் நோய்வாய்ப்பட்டு கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (09) காலை இறைவனடி சேர்ந்தார்.
இந்நிலையில் இறுதி கிரியைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை நல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் அமைதியான முறையில் இடம்பெற்றது.
இதில் அரசியல் பிரமுகர்கள், ஆலய தொண்டர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து பூதவுடல் காலை 11 மணியளவில் செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.
அதன் போது , வழிநெடுகிலும் பொதுமக்கள், வீதிகளில் நின்றவர்கள் அஞ்சலி செலுத்தியதுடன் மலர்தூவி மரியாதை செலுத்தினர் .
சுகாதார நடைமுறைப்படி , ஆரவாரங்கள் எதுவுமின்றி மிகவும் அமைதியான முறையிலே இறுதி ஊர்வலம் இடம்பெற்றிருந்தமை விசேட அம்சமாகும்.
1964 டிசம்பர் 15 முதல் நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரியாக அவர் சேவையாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கத்து.


தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam