பௌத்த பிக்குவிடமிருந்து திருடப்பட்ட 4 லட்சம் ரூபா
பௌத்த பிக்கு ஒருவரின் கடன் அட்டையைத் திருடி நான்கு லட்சம் ரூபா மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மாளிகாவத்தை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கொழும்பு, மாளிகாவத்தை பிரதேசத்தில் உள்ள பிரபலமான விகாரை ஒன்றில் தங்கியுள்ள பௌத்த பிக்கு ஒருவருக்குச் சொந்தமான கடனட்டை கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருடப்பட்டு அதன் மூலம் நான்கு லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு தொலைப்பேசிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்ற அனுமதி

சம்பவம் தொடர்பில் குறித்த பிக்கு மேற்கொண்டுள்ள முறைப்பாட்டை அடுத்து மாளிகாவத்தை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அத்துடன் விசாரணைகளுக்கான காணொளிக் காட்சிகள் உள்ளிட்ட தடயங்களை பெற்றுக் கொள்வதற்கு நீதிமன்ற அனுமதியும் பெற்றுக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan