அடக்குமுறைகளுக்கு ஓடி ஒழியும் கோழைத்தனமான அரசியல்வாதிகள்! அருட்தந்தை சுட்டிக்காட்டு
மக்களின் வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றம் சென்ற தமிழ் பிரதிநிதிகள் என்று சொல்லப்படுபவர்கள், அடக்குமுறைச் சட்டங்களுக்கு அஞ்சி ஓடி ஒளியும் கோழைத்தனமான துன்பியலை நாம் காண்கிறோம் என வட்டுக்கோட்டை 50 எழுச்சிமாநாட்டின் ஏற்பாட்டுக்குழுவின் இணைப்பாளரில் ஒருவரான அருட்தந்தை க.ஜெகதாஸ் தெரிவித்தார்.
கொடிய பயங்கரவாதத் தடைச்சட்டம், அடக்குமுறையான ஆறாம் திருத்தச் சட்டத்திற்கு அஞ்சி ஒடுங்கி அதனுடைய விசுவாசிகளாக மாறிவிட்ட ஒரு கோழைத்தனமான துன்பியலை இப்போது நாங்கள் காண்கிறோம்.
மக்கள் தங்களுடைய உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும், தங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று சொன்னால் அநீதியான, அடக்குமுறையான சட்டங்களை மக்கள் உடைத்தெறிய வேண்டும்.அதுதான் உலக ஒழுங்கு, அதுதான் ஜனநாயக உரிமை.ஆனால் இன்று சட்டங்களைச் சொல்லியே மக்களை மிரட்டுகிறார்கள், விரட்டுகிறார்கள், அடக்குகிறார்கள்.
அடக்குமுறை
சில வேளைகளில் இந்தச் சட்டங்களைக் கொண்டுவந்த ஆக்கிரமிப்பாளர்களும் ஆட்சியாளர்களும் சட்டத்தைக் குறித்துக் கவலைப்படுவதில்லை என்று பார்க்க, எந்த மக்களுக்கு எதிராகச் சட்டம் கொண்டுவரப்பட்டதோ அந்த மக்களுடைய பிரதிநிதிகள் என்று சொல்லப்படுகிறவர்கள்.

இந்தச் சட்டங்களுக்குப் பயந்து, அடங்கி, ஒடுங்கி, இந்தச் சட்டங்களைப் போற்றுகிறவர்களாய் மாறிவிட்ட துன்பியலை இப்போது நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
இந்த மக்களுக்கு எதிராகக் கொண்டுவந்த சட்டங்களில் இருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டியவர்கள், தங்களைப் பாதுகாப்பதற்காக ஓடி ஒளிந்து கொள்ளுகிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
மோசமடையும் வானிலை தொடர்பில் விழிப்புடன் இருக்கவும்..! பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை