கோவிட் தொற்று நான்காவது அலை ஆரம்பம்: சுகாதார திணைக்களம் விடுத்துள்ள கோரிக்கை
நாடளாவிய ரீதியில் கோவிட் தொற்றாளர்களின் வீதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதனால் பொதுமக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறு சுகாதார திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் கோவிட் தொற்று நான்காவது அலை ஆரம்பமாகிய நிலையில் கோவிட் தொற்றாளர்களின் வீதம் அதிகரிக்கப்பட்டு கோவிட் மரணங்களும் பதிவாகியுள்ளது.
யாழ்ப்பானம்
யாழில் கோவிட் தொற்றால் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வடமராட்சி பகுதியை சேர்ந்த 91 வயதான முதியவர் கடந்த 21ஆம் திகதி சுகவீனம் காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்போது அவருக்கு கோவிட் தொற்றும் உறுதியாகி இருந்த நிலையில் நேற்று (30) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
திருகோணமலை
திருகோணமலை- அபயபுர பகுதியில் கோவிட் தொற்று அதிகரித்து வருவதால் சமூக இடைவெளிகளை பேணுமாறு திருவண்ணாமலை பிராந்திய வைத்திய பொறுப்பதிகாரி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் , தொடர்ச்சியாக முகக்கவசங்களை அணியுமாறும், பொதுமக்கள் அதிகளவில் ஒன்று கூட வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.
அதிகரிக்கும் கோவிட் தொற்று

அபயபுர பகுதியில் 25 வயது உடைய தாயாருக்கும் ஒரு மாத
கைக்குழந்தைக்கும் தொடர்ச்சியான காய்ச்சல் ஏற்பட்டுள்ள நிலையில் தனியார்
மருத்துவமனையில் அண்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த இருவருக்கும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கடமையாற்றி வந்த பொது
சுகாதார பரிசோதருக்கு மேற்கொள்ளப்பட்ட அண்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனை
மூலம் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருகோணமலை மாவட்டத்தில் தற்போது கோவிட் தொற்றாளர்களின் வீதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
| நான்காம் கட்ட கோவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை (Photo) |
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 12 மணி நேரம் முன்
ஜனநாயகன் படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் ரிப்போர்ட்.. ரிலீஸுக்கு முன் இவ்வளவு கோடி லாபமா Cineulagam
ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட கம்ருதீன், மகாநதி சீரியலில் இருந்து நீக்கம்? அதிர்ச்சி தகவல் Cineulagam
திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan