இலங்கையில் கோவிட் -19 மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு
நாட்டில் கோவிட் -19 மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வடைந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இன்றைய தினம் 7 கோவிட் -19 மரணங்கள் தொடர்பிலான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி இலங்கையில் கோவிட் -19 காரணமாக மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 339 ஆக உயர்வடைந்துள்ளது.
1. மக்கான பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதான ஆண் ஒருவர் ஐ.டி.எச் வைத்தியசாலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். சிறுநீரக கோளாறு மற்றும் கோவிட் -19 நிமோனியா காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.
2. வேஉட பிரதேசத்தைச் சேர்ந்த 82 வயதான ஆண் ஒருவர் தெல்தெனிய வைத்தியசாலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். கோவிட் -19 நிமோனியா, இருதய நோய் மற்றும் சிறுநீரக கோளாறு என்பவற்றினால் இவர் உயிரிழந்துள்ளார்.
3. கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதான ஆண் ஒருவர் தெல்தெனிய வைத்தியசாலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். கோவிட் -19 நிமோனியா, இருதய நோய் மற்றும் சிறுநீரக கோளாறு என்பவற்றினால் இவர் உயிரிழந்துள்ளார்.
4. ஹெட்டிபொல பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதான ஆண் ஒருவர் ஹோமகம வைத்தியசாலையில் இன்று உயிரிழந்துள்ளார். கோவிட் -19 நிமோனியா காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.
5. பியகம பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயதான ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடந்த 2ம் திகதி உயிரிழந்துள்ளார். கோவிட் -19 நிமோனியா மற்றும் சுவாசப்பை கோளாறு காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.
6. திக்வெல்ல பொதரகந்த பிரதேசத்தைச் சேர்ந்த 78 வயதான பெண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடந்த 1ம் திகதி உயிரிழந்துள்ளார். கோவிட் -19 தொற்று, இருதயயக் கோளாறு மற்றும் இரத்த அழுத்தம் காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.
7. நுவரெலியா பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதான ஆண் ஒருவர் ஹோமகம வைத்தியசாலையில் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார். கோவிட் -19 நிமோனியா காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.
சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தல்களுடன் அரசாங்கத் தகவல் திணைக்களம் இந்த விபரங்களை வெளியிட்டுள்ளது.




