கொழும்பு வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோவிட் எச்சரிக்கை
கொழும்பில் கோவிட் வைரஸின் புதிய மரபணு வேகமாக பரவக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு கொழும்பு நகர சபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி ருவன் விஜேமுனி தெரிவித்துள்ளார்.
இந்த புதிய வைரஸ் மரபணு கொழும்பு நகரில் வேகமாக பரவுவதாக அண்மையில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்திம ஜீவன்தரவினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய திருமண நிகழ்வு, பிறந்த நாள் விழா மற்றும் இரவு நேர கேளிக்கை விடுதிகள் நடத்தி செல்வதனை நிறுத்தவேண்டும் என அவர் கூறியுள்ளார்.
முடிந்தளவு மக்கள் ஒன்றுகூடுவதனை தவிர்க்க வேண்டும். உரிய சுகாதார முறைகளை பின்பற்றவில்லை என்றால், கொழும்பு நகரில் பாரிய அளவு கொரோனா பரவக்கூடிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri