இலங்கையில் ஒரு கோடிக்கும் அதிகமான மக்களுக்கு கோவிட் தடுப்பூசி
இலங்கையில் ஒரு கோடிக்கும் அதிகமான மக்களுக்கு கோவிட் தடுப்பூசியின் இரண்டு அளவுகளுடன் வழங்கப்பட்டுள்ளன.
இன்றைய நிலவரப்படி 1 கோடியே 21 லட்சத்து 1537 பேர் தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் பெற்றுள்ளதாகச் சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
தொற்றுநோயியல் பிரிவின் படி 14 லட்சத்து 26 ஆயிரத்து 469 பேர் எஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் முதல் அளவையும், 8 லட்சத்து 89 ஆயிரத்து 110 பேர் இரண்டாவது அளவையும் பெற்றுள்ளனர்.
சினோபார்ம் தடுப்பூசியின் முதல் டோஸை 14 லட்சத்து 96 ஆயிரத்து 253 பேரும், இரண்டாவது டோஸ் 83 லட்சத்து 18 ஆயிரத்து 368 பேரும் பெற்றுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், 1 லட்சத்து 59 ஆயிரத்து 89 பேர் ஸ்புட்னிக் V தடுப்பூசியின் முதல் அளவையும், 43 ஆயிரத்து 450 இரண்டாவது அளவையும் பெற்றுள்ளனர்.
4 லட்சத்து 10 ஆயிரத்து 224 பேர் பைசர் தடுப்பூசியின் முதல் அளவையும், 2 லட்சத்து 37 ஆயிரத்து 163 இரண்டாவது அளவையும் பெற்றுள்ளனர்.
 7 லட்சத்து 72 ஆயிரத்து 771 பேருக்கு மொடெர்னா தடுப்பூசியையும், 7 லட்சத்து 23 ஆயிரத்து 446 இரண்டாவது அளவையும்  பெற்றுள்ளனர்.
 
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    சக்திக்கு வைத்த செக், தர்ஷனுக்கு ஷாக் கொடுத்த குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        