12 வயது பிள்ளைக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்ட விவகாரம் - விசாரணைகளின் பின் நடவடிக்கை
சுகாதார அமைச்சின் அனுமதியின்றி வடமேல் மாகாணத்தில் 12 வயது பிள்ளைக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்ட சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணையின் பின்னர் கிடைக்கும் அறிக்கையின் அடிப்படையில் அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
12 வயதிற்கு உட்பட்ட பிள்ளைகளுக்கு தடுப்பூசி வழங்குவது குறித்து ஆய்வுகள் நடந்து வருகின்ற போதிலும் இதுவரை எந்த கொள்கை முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் தற்போது தடுப்பூசியின் இலக்கு 30 மற்றும் அதற்கு மேல் உள்ள அகவையாக உள்ளது.
எனினும், 30 அகவைக்கு உட்பட்ட தொழிற்சாலை பணியாளர்களுக்கு சில சந்தர்ப்பங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும் இலங்கையின் சுகாதார அமைச்சு கூறியுள்ளது.



