கோவிட் தடுப்பூசி தொடர்பில் மீண்டும் நாட்டு மக்களுக்கு வலியுறுத்தல்
நாட்டில் ஒரு இலட்சம் பேர் மட்டுமே கோவிட் 4ம் தடுப்பூசி அல்லது இரண்டாம் பூஸ்டர் தடுப்பூசியை ஏற்றிக்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி செலுத்துவதன் முக்கியத்துவம்
கோவிட் பரவுகையை கட்டுப்படுத்த வேண்டுமாயின் அதிக எண்ணிக்கையிலானவர்கள் தடுப்பூசி ஏற்றிக் கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
முதல் கோவிட் தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர் மேலும் மூன்று தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.
பூஸ்டர் தடுப்பூசி ஏற்றிக்கொள்வதில் மக்கள் கூடுதல் நாட்டம் காட்டவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோவிட் பரவல் அதிகரிக்கும் சாத்தியம்
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சமய நிகழ்வுகள் நடைபெற்று வரும் நிலையில் கோவிட் பரவுகை அதிகரிக்கும் சாத்தியங்கள் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மக்கள் பொதுவாக கோவிட் பெருந்தொற்று தொடர்பில் கூடுதல் அவதானம் செலுத்தாத நிலையை அவதானிக்க முடிவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam
