வெளியே செல்லும் போது கோவிட் தடுப்பூசி அட்டை கட்டாயமா? வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல்
இலங்கையில் கோவிட் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கும் திட்டம் எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டுவரும் நிலையில், பொது இடங்களில் ஒன்று கூடுவதற்கும், வெளியே செல்வதற்கும் கோவிட் தடுப்பூசி அட்டை அவசியம் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன.
இது தொடர்பில் தகவல் வெளியிட்ட அவர், கோவிட் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கும் திட்டம் எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை. குறித்த தீர்மானத்தை எடுப்பது தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.
தேவை ஏற்படும் பட்சத்தில் அவ்வாறான தீர்மானம் எடுக்கப்படும். அவ்வாறு இல்லாத சந்தர்ப்பத்தில் குறித்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படமாட்டது என்றார்.
இதேவேளை, தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்வதனை தடை விதிக்க வாய்ப்பு உள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல (Keheliya Rambukwella) தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பதினாறாவது மே பதினெட்டு 5 நாட்கள் முன்

இந்தியாவிடம் பின்னடைவு... கடும் நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான் எடுத்துள்ள அந்த முடிவு News Lankasri
