வவுனியாவில் மாவட்ட பொது வைத்தியசாலையில் பல்கலைக்கழக வளாகத்தினருக்கு கோவிட் தடுப்பூசி ஏற்றல்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வவுனியா மற்றும் கிளிநொச்சி வளாகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் கோவிட் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன.
இச்செயன்முறை இன்று காலை 9 மணி தொடக்கம் 12 மணி வரையில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் 2100 பேருக்கு கோவிட் தடுப்பூசி வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விசேட உத்தரவை வழங்கியதன் அடிப்படையில் யாழ். பல்கலைக்கழகத்தின் பணியாளர்களுக்குத் சீன அரசாங்கத்தால் இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட சினோபாம் தடுப்பூசி வழங்கும் பணி நேற்று ஆரம்பிக்கப்பட்டது.
இதன் அடுத்தகட்டமாக யாழ். பல்கலைக்கழக வவுனியா மற்றும் கிளிநொச்சி வளாகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் வைத்து இன்று சினோபாம் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன.
அந்த வகையில் யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தினை சேர்ந்த 62 நபர்களுக்கும், கிளிநொச்சி வளாகத்தைச் சேர்ந்த 60 நபர்களும் என 122 நபர்களுக்கு இவ்வாறு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன.











6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam
