கோவிட் தடுப்பூசி அட்டை கட்டாயமாகியது! சுகாதார அமைச்சரின் விசேட அறிக்கை
இலங்கையில் பொது இடங்களுக்கு செல்லும்போது கொவிட் தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இதற்கமைய எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் பொது இடங்களுக்குச் செல்லும் போது கொவிட் தடுப்பூசி அட்டை கொண்டு செல்வதை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சு தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவது குறித்து நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நேற்றைய தினம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், சுகாதார அமைச்சின் ஊடக செயலாளர் இந்திக பொல்கொட்டவின் கையெழுத்துடன் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுத் தொடர்பில் சட்ட ஆலோசனைப் பெறப்பட்டுள்ளதாகவும், இதற்கமைய இந்த திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் குறித்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்களுக்கு விசேட செயலி ஒன்றையும், QR குறியீடு ஒன்றையும் பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
பொது இடங்களில் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்களை கண்டறிந்து அனுமதிப்பது அந்தந்த நிறுவனங்களின் முகாமைத்துவங்களின் பொறுப்பு எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாமல் இருப்பதற்கு எவருக்கும் உரிமையுண்டு எனவும், எனினும் ஏனையவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த எவருக்கும் உரிமையில்லை எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இரண்டு தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டுள்ள அனைவரும் மூன்றாவது தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும், சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அழைப்பு விடுத்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam
