இலங்கையில் தீவிரமடையும் கோவிட் தொற்று! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையில் தற்போது கோவிட் தொற்றாளர்களில் அதிகரிப்பு ஏற்பட்டு வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
நாட்டில் கடந்த வாரத்தில் 40 கோவிட்த்தொற்றுக்கள் பதிவாகியுள்ளதாக சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்
எனவே, நோய்த்தொற்றுகள் அதிகரித்துள்ள நாடுகளில் இருந்து நாட்டிற்குள் பிரவேசிப்பவர்களை மையமாக வைத்து கோவிட் வைரஸ் கண்டறியும் முறைமை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில நாடுகள், சீனாவிலிருந்து வருபவர்கள் மீது கோவிட் சோதனை மற்றும் சாத்தியமான தனிமைப்படுத்தல் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துகின்றன.
ஓமிக்ரான் தொற்று ஓரு வருடத்திற்கும் மேலாக உலகளாவிய மாறுபாடுகளில் ஆதிக்கம்
செலுத்துகிறது. ஆனால் எதிர்காலத்தில் புதிய மாறுபாடு வெளிப்படும் என்ற அச்சத்தை எவரும்
மறுக்கவில்லை என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam