விமான பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்
உலகின் பல நாடுகளில் தற்போது கோவிட் தொற்று பரவல் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் சில நாடுகள் சுகாதார பாதுகாப்பினை பலப்படுத்தி வருகின்றன.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் உலக சுகாதார ஸ்தாபனம் விமான பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தலொன்றை வழங்கியுள்ளது.

விமான பயணிகளுக்கான அறிவுறுத்தல்
அதன்படி உலக நாடுகளில் தொடர்ந்தும் கோவிட் தொற்று பரவல் காணப்படுவதால் நீண்ட தூரங்களுக்கு பயணங்களை மேற்கொள்ளும் பயணிகள் விமானத்தில் முகக்கவசங்களை அணிய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், விமான பயணங்களை மேற்கொள்வதற்கு முன், பயணிகளுக்கு கோவிட் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
புதிய வைரஸ் திரிபு அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

எனவே ஏனைய நாடுகள் பாரபட்சமின்றி கோவிட் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
77 பந்தில் சதமடித்த 22 வயது வீராங்கனை! உலகக்கிண்ண அரையிறுதியில் சாதனை..திணறும் இந்திய அணி News Lankasri