திருகோணமலையில் முகக்கவசம் அணியாத பலர் பொலிஸாரால் கைது
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் முகக்கவசம் அணியாத எட்டு பேர் கந்தளாய் பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
கந்தளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில் கந்தளாய் பேராறு பகுதியில் இடம்பெற்ற இவ்விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது கந்தளாய் பேராறு, மத்ரஸா நகர் பகுதியில் முகக்கவசம் அணியாதோர் மற்றும் சுகாதார நடைமுறையினை பின்பற்றாதோர் மற்றும் தலைக்கவசம் அனுமதிப்பத்திரம் இன்றி மோட்டார் சைக்கிள் செலுத்தியோர் இவ்வாறு எட்டுப் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீதியில் முகக்கவசம் அணியாது நின்றவர்கள் மற்றும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத எட்டு நபர்களை பொலிஸார் தூக்கிச் சென்று வாகனத்தில் ஏற்றிச் சென்றதை காணகூடியதாக இருந்தது.
இச்செயற்பாடு திருகோணமலை மாவட்டத்தில் அனைத்து பொலிஸ் பிரிவுகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.










சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
