திருகோணமலையில் 1517 பேருக்கு கோவிட் தொற்று உறுதி - 12 மரணங்கள் பதிவு
திருகோணமலை மாவட்டத்தில் 1517 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 12 மரணங்கள் பதிவாகியுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டி.ஜீ.எம்.கொஸ்தா தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலை தொடர்பில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 2ஆம் திகதி வரை 1517 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 401 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன் 506 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இம்மாதம் முதலாம் திகதி திருகோணமலை மாவட்டத்தில் 34 பேருக்கும், இரண்டாம் திகதி 42 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ந்தும் பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதுவரைக்கும் திருகோணமலை சுகாதார
வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் 641 பேருக்கும், உப்புவெளி பிரதேசத்தில் 382 பேருக்கும், கிண்ணியா சுகாதார
வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதியில் 156 பேருக்கும், குச்சவெளி
பிரதேசத்தில் 49 பேருக்கும், குறிஞ்சாங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி
அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் 38 பேருக்கும், மூதூர் பிரதேசத்தில் 99 பேருக்கும்,
சேருவில பிரதேசத்தில் 18 பேருக்கும், ஈச்சிலம்பற்று பிரதேசத்தில் ஒருவருக்கும்,
கந்தளாயில் 73 பேருக்கும் தம்பலகாமத்தில் 25 பேருக்கும், கோமரங்கடவல பிரதேசத்தில் 27
பேருக்கும், பதவிசிறிபுர பகுதியில் 8 பேருக்கும் கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
27வது திருமண நாள் நெருங்கும் நிலையில் விவாகரத்து வழக்கு வாபஸ்! விஜய்யுடன் மீண்டும் இணைவாரா? Manithan
இதெல்லாம் வெறும் ட்ராமா! மோகன் சர்மா முதியோர் இல்ல நாடகம் குறித்து குட்டி பத்மினி பரபரப்பு பேட்டி Manithan
இலங்கையில் அரைகுறை கவர்ச்சி உடையில் வலம்வந்த சீரியல் நடிகை தர்ஷனா... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam