அடுத்த இரண்டு மாதங்களுக்கு கோவிட்டை கட்டுப்படுத்தலாம் என நம்பிக்கை
எதிர்வரும் ஜூலை முதல் ஆகஸ்ட் மாதங்களுக்குள் இலங்கையில் கோவிட் வைரஸ் பரவலை முற்றாக கட்டுப்படுத்த முடியும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அரச மருந்து கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட மருத்துவ நிபுணர் பிரசன்ன குணசேன இதனை கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
கோவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நிலைமையை நெருங்க வேண்டுமாயின் இலங்கை மக்கள் தொகையில் 60 வீதமானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்.
இதற்காக உலகில் தடுப்பூசிகளை தயாரிக்கும் நான்கு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை செய்து கொள்ளப்பட்டுள்ளன.
உலக சுகாதார அமைப்பு ரஷ்யாவின் ஸ்புட்னிக், ஒக்ஸ்பேர்ட் எஸ்ராசேனிகா, பைசர் பயோடெக் ஆகிய நிறுவனங்களுடன் தேவையான வகையில் ஒப்பந்தங்களை செய்யப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் நாட்டுக்கு தேவையான தடுப்பூசிகள் கிடைக்கும். எவ்வாறாயினும் நாட்டு மக்கள் வரையரைகளுடன் கூடிய வாழ்க்கை பழக்கங்களை கொண்டு நடத்த வேண்டும். இன்னும் மூன்று மாதங்கள் மாத்திரமே எஞ்சியுள்ளன.
எனினும் வைரஸ் உருமாறும் நிலைமை மற்றும் அதற்கு தடுப்பூசிகள் ஈடுகொடுக்கும் தன்மைக்கு அமைய இது மாறுபடலாம் எனவும் பிரசன்ன குணசேன குறிப்பிட்டுள்ளார்.

இந்த தேதியில் பிறந்தவங்க துணைக்காக எதையும் துணிச்சலாக செய்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
