பிலிப்பைன்ஸிலிருந்து திருகோணமலைக்கு கப்பலில் வந்த நபருக்கு கோவிட் தொற்று
பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து திருகோணமலைக்கு கப்பலில் வந்த நபருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து கப்பலில் வருகை தந்த 61 வயதுடைய நபர் தவறி விழுந்த நிலையில் 1990 நோயாளர் காவு வண்டி மூலமாக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
குறித்த நபருக்கு முதுகெலும்பு உடைந்துள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இன்று அதிகாலை பெறப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் மூலம் அவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த நபர் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த EFRENL AGVAYANI (61 வயது) என தெரியவந்துள்ளது.
அவர் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலையின் விபத்து சேவை பிரிவில்
தனி அறையில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரியவருகின்றது.



பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam
