விமான நிலையங்கள் மூடப்படுமா? எதிர்வரும் நாட்களில் முடிவு என்கிறார் அமைச்சர் பிரசன்ன
விமான நிலையங்களை மூடுவதற்கு இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
எனினும், கோவிட் ஒழிப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் வழிகாட்டலுக்கு ஏற்ப எதிர்வரும் நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஊடகங்களிடம் அவர் கூறியுள்ளார்.
மேலும், சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தலுக்கு அமைய வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தொழிலாளர்களை நாட்டுக்கு அழைத்துவரும் பணி தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விமான நிலையங்களில் மேற்கொள்ளப்படும் தனிமைப்படுத்தல் நடைமுறைகள் அரச தனிமைப்படுத்தல் மையங்களைப் போலவே தொடரும் அதேவேளை, தற்போதைய சூழ்நிலையில் பணியாற்றுவதற்கு விமான நிலைய ஊழியர்களுக்கு விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து வரும் இலங்கைத் தொழிலாளர்களிடையே கோவிட் தொற்று
எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், அவர்களிடமிருந்து இதுவரை கோவிட் கொத்தணிகள்
உருவாகவில்லை என்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க
சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri