கோவிட் பரவலில் தெற்காசிய ரீதியில் இலங்கை பிடித்துள்ள இடம்
கடந்த வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்த ஒரு வார காலத்தில் இலங்கையில் கோவிட் பரவும் வேகம் 82 வீதம் என சர்வதேச ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
தினமும் கோவிட் நோய் பரவுவது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் வேல்ட் மீற்றர் இணையத்தளம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
தெற்காசியாவின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது நோபாளத்தில் கோவிட் பரவலானது 105 வீதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் நோயாளிகள் அதிகளவில் காணப்படும் இந்தியாவில் அந்த நாட்டின் சனத்தொகைக்கு ஏற்ப கோவிட் பரவலானது 11 வீதம் என்ற மட்டத்தில் காணப்படுகிறது.
இது தெற்காசியாவில் குறைந்தளவான நோயாளிகளின் அதிகரிப்பாகும்.
கோவிட் பரவலில் இலங்கை தெற்காசிய ரீதியில் இரண்டாவது இடத்தில் காணப்படுகிறது. இலங்கைக்கு அடுத்ததாக மாலைதீவுகளில் அதிகளவான நோய் பரவல் காணப்படுகிறது.
அங்கு கோவிட் பரவல் வேகம் 69 வீதமாகும். இந்தியாவுக்கு அடுத்து பூட்டான் நாட்டிலேயே குறைவான நோய் பரவல் காணப்படுகிறது.
அங்கு நோய் பரவல் 16 வீதமாக காணப்படுகிறது. கடந்த வாரத்தில் பெரு ஐலேன்ட் தீவுகளில் கோவிட் பரவல் வேகம் 500 வீதமாக காணப்பட்டுள்ளது.
ஆய்வு அறிக்கைக்கு அமைய உலகமும் முழுவதும் கோவிட் பரவல் வேகமானது 3 வீதமாக காணப்பட்டுள்ளதுடன் உலகம் முழுவதும் கடந்த வாரத்தில் 91 ஆயிரத்து 596 பேர் கோவிட் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் 4 லட்சத்து 382 பேர் குணமடைந்துள்ளனர். இது முழு நோயாளிகளின் எண்ணிக்கை 8 வீதமாகும் எனவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 11 மணி நேரம் முன்

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
