கோவிட் செயலணியின் முடிவுகள் தொடர்பில் இராணுவ தளபதி கூறியுள்ள விடயம்
கோவிட் கட்டுப்பாட்டு செயலணியால் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானமும் ஜனாதிபதி மற்றும் தன்னால் தனியாக எடுக்கப்படும் தீர்மானம் அல்ல என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கோவிட் கட்டுப்பாட்டு செயலணி மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில்,
இந்த காலகட்டத்தில் முழு நாடும், நாட்டு மக்களும் வைத்தியத்துறையினர், மற்றும் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படும் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டங்களை பாராட்டும் இந்த நேரத்தில் ரணில் விக்ரமசிங்க மாத்திரம் இந்த விடயத்தை விமர்சிக்கும் நிலையில், நாட்டு மக்கள் தெரிந்து கொள்ளவேண்டிய ஒரு முக்கிய விடயம் ஒன்று காணப்படுகிறது.
ரணில் தனக்கான தடுப்பூசியை இலங்கை இராணுவத்தின் பிரதான வைத்தியசாலையிலேயே பெற்றுக்கொண்டார். அவருக்கு இராணுவத்தின் தடுப்பூசி வழங்கும் நிலையத்தின் ஊடாக தடுப்பூசியை பெற்றுக்கொள்வது அவசியம் எனின், நாட்டு மக்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பில் அவர் கூறுவது சரியா பிழையா என நாட்டு மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.
கோவிட் கட்டுப்பாட்டு செயலணியை எடுத்துக்கொண்டால் இதன் தலைவராக ஜனாதிபதியே செயற்படுகின்றார். சுகாதார அமைச்சு சார்பாக 3 அமைச்சர்கள் உள்ளார்கள்.
அவர்கள் மாத்திரமன்றி இராஜாங்க அமைச்சர்கள் சிலரும் இந்த செயலணியில் உள்ளனர். சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், முப்படைகளின் பிரதானிகள், பொலிஸ் மா அதிபர் மற்றும் விசேட வைத்திய நிபுணர்கள் சிலரும் இந்த செயலணியில் உள்ளனர்.
ஆகவே இதில் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானமும் ஜனாதிபதியாலோ அல்லது தன்னாலோ தனியாக எடுக்கப்படும் தீர்மானங்கள் அல்ல. இவை தொடர்பாக விமர்சனங்கள் இருக்கலாம்.
ஆனால் இதில் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் அனைவரதும் முடிவாகும் என்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என சுட்டிக்காட்டியுள்ளார்.





உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
