திருமண நிகழ்வுகள் தொடர்பில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய தீர்மானம்
இலங்கையில் கோவிட் தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் திருமண நிகழ்வுகள் தொடர்பில் சில புதிய தீர்மனங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி 500 இருக்கைகள் கொண்ட திருமண மண்டபங்களில் இடம்பெறும் திருமண நிகழ்வுகளில் 150 பேருக்கு மாத்திரமே கலந்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் பரவல் தடுப்பு செயலணியின் கலந்துரையாடலொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்றைய தினம் இடம்பெற்றிருந்தது.
இதனை தொடர்ந்து இராணுவ தளபதி சவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அத்துடன் 500 இருக்கைகளுக்கு குறைந்த திருமண மண்டபங்களில் இடம்பெறும் திருமண நிகழ்வுகளில் 100 பேருக்கு மாத்திரமே கலந்து கொள்ள முடியும்.
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், மரண வீடொன்றில் ஒரு சந்தர்ப்பத்தில் 25 பேர் மாத்திரமே கலந்து கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 8 மணி நேரம் முன்

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
