நாட்டு மக்களுக்கு அமைச்சர் நாமல் ராஜபக்ச வழங்கியுள்ள முக்கிய அறிவுறுத்தல்
நாட்டில் கோவிட் தொற்றானது தீவிர நிலையை அடைந்து வருவதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் அமைச்சர் நாமல் ராஜபக்ச நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தலொன்றை வழங்கியுள்ளார்.
அதன்படி கோவிட் தொற்றிலிருந்து மக்கள் தம்மை பாதுகாத்துக் கொள்ள பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் டுவிட்டர் பதிவொன்றை இன்றைய தினம் பதிவு செய்துள்ளார்.
அந்த பதிவில், டிக்கடி கைகளைக் கழுவுங்கள், முகக்கவசம் அநாவசியமாக அகற்ற வேண்டாம், பொது இடங்களில் கட்டாயம் சமூக விலகலை கடைபிடிக்கவும், கண், மூக்கு, வாய் - அடிக்கடி தொட வேண்டாம், தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள், முடிந்தவரை வீட்டிலேயே இருங்கள் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
? அடிக்கடி கைகளைக் கழுவுங்கள்.
— Namal Rajapaksa (@RajapaksaNamal) August 6, 2021
? முகக்கவசம் அநாவசியமாக அகற்ற வேண்டாம்.
??♂️-??♀️பொது இடங்களில் கட்டாயம் சமூக விலகலை கடைபிடிக்கவும்.
?♂️ கண், மூக்கு, வாய் - அடிக்கடி தொட வேண்டாம்.
?தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்.
? முடிந்தவரை வீட்டிலேயே இருங்கள்.#StayHome #WashYourHands
இதேவேளை களுபோவில வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள தீவிர நிலை தொடர்பில் படங்களுடன், இந்தியாவைப் பற்றி படித்த செய்திகளை தற்போது நேரில் பார்க்க முடிவதாக சுட்டிக்காட்டியிருந்த பதிவொன்று நேற்றைய தினம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 9 மணி நேரம் முன்

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
