டெல்டா திரிபு தொற்றுக்கு உள்ளான மாணவருடன் சம்பந்தப்பட்டவர்கள் இரு இடங்களில் கண்டுபிடிப்பு
கோவிட் வைரஸ் திரிபான டெல்டா தொற்றுக்கு இலக்காகிய மருத்துவ மாணவருடன் சம்பந்தப்பட்டவர்கள் இரண்டு இடங்களில் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார ஊக்குவிப்பு பணியகத்தின் பணிப்பாளர் விசேட மருத்துவ நிபுணர் ரஞ்சித் பட்டுவந்துடாவ தெரிவித்துள்ளார்.
கண்டறியப்பட்டுள்ளவர்களிடமிருந்து சளி மாதிரிகள் பெறப்பட்டுள்ளதாகவும் அவற்றின் மூலம் கோவிட் வைரஸ் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டால், மரபணு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் டெல்டா திரிபு தொற்றிய மருத்துவ மாணவர் அண்மைய காலத்தில் பல்கலைக்கழகத்திற்கு செல்லவில்லை எனவும் இதனால் வைரஸானது பல்கலைக்கழகத்திற்குள் பரவும் ஆபத்து ஏற்படவில்லை எனவும் மருத்துவர் ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே கண்டறியப்பட்டுள்ள டெல்டா தொற்றுக்கு உள்ளான கடற்படை சிப்பாய் இருப்பதாகவும், எனினும் கடற்படையினருக்குள் நோய் பரவும் வாய்ப்பு குறைவு எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam