டெல்டா திரிபால் மீண்டுமொரு கோவிட் அலை இலங்கையில் உருவாகும் ஆபத்து
இலங்கையில் 'டெல்டா' திரிபு காரணமாக மேலும் ஒரு கோவிட் அலை உருவாகக்கூடும் என்றும், அது நாட்டில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய தொற்று நோய் தடுப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
உரிய சுகாதார வழிகாட்டுதல்களை பொதுமக்கள் பின்பற்ற வேண்டியது அவசியமாகும். அவ்வாறில்லை எனின், எதிர்வரும் சில வாரங்களில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமாயின் மரண வீதமும் அதிகரிக்ககூடிய சாத்தியங்கள் உள்ளன.
எனவே, டெல்டா வைரஸ் திரிபு குறித்து பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்பதுடன் சுகாதார வழிகாட்டல்களையும் உரிய முறையில் பின்பற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
அறிவுக்கரசி வீடியோவாக காட்டிய விஷயம், கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
காயத்ரி பிரச்சனை முடிந்ததும் சோழனை தனியாக அழைத்துச்சென்று நிலா சொன்ன விஷயம்... அய்யனார் துணை சீரியல் அடுத்த கதைக்களம் Cineulagam