கொழும்பில் கோவிட் தொற்று நிலவரம் - மாநகரசபையின் தலைமை மருத்துவ அதிகாரி தகவல்
கொழும்பு நகரத்தில் கோவிட் வைரஸ் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் தலைமை மருத்துவ அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
கொழும்பு நகரத்தில் இருந்து நாளாந்தம் சுமார் 140 தொற்றாளர்கள் கண்டறியப்படுகின்றனர்.
நாள்தோறும் 600இற்கும் மேற்பட்ட பிசிஆர் சோதனைகள் மற்றும் சுமார் 100 விரைவான என்டிஜென் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதன்போது, பி.சி.ஆரில் 50 சதவீதத்திற்கும் குறைவாகவும், என்டிஜென் சோதனைகளில் 15 சதவீதத்திற்கும் குறைவாகவும் தொற்றாளர்கள் கண்டறியப்படுவதாக கொழும்பு மாநகர சபையின் தலைமை மருத்துவ அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்தார்.
இதேவேளை கொழும்பு நகருக்குள் பதிவாகும் கோவிட் நோயாளிகளில் சுமார் 30 சதவீதம் பேர் டெல்டா தொற்றாளர்களாக உள்ளனர்.
கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட தடுப்பூசி திட்டத்தின் காரணமாகவே, கொழும்பு நகரத்தில் தொற்றுக்கள் குறைந்துள்ளன.
கொழும்பில் இன்னும் பத்து சதவீத மக்கள் மட்டுமே, ஒரு அளவு தடுப்பூசியைக் கூட செலுத்திக் கொள்ளாமல் இருக்கிறார்கள் என கொழும்பு மாநகர சபையின் தலைமை மருத்துவ அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.



