இந்தியாவில் அதிகரிக்கும் கோவிட்: ஒரேநாளில் 10 ஆயிரத்தைத் தாண்டியது!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் பாதிப்பு 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக இந்தியச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கோவிட் பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 223 நாட்களில் இல்லாத அளவில் நேற்றைய தினம் (12.04.2023) ஒருநாளில் கோவிட் பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
இந்நிலையில், இன்றைய தினம் (13.04.2023) இந்தியச் சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,158 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் நேற்றுடன் ஒப்பிடுகையில் பாதிப்பு ஒரே நாளில் 30 சதவீதம் அதிகரித்துள்ளது எனவும் கூறியுள்ளது.

மொத்த எண்ணிக்கை
மேலும், தினசரி கோவிட் பாதிப்பு 10 ஆயிரத்தைத் தாண்டியிருப்பது கடந்த 8 மாதங்களில் இதுவே முதல் முறையாகும்.
தினசரி பாதிப்பு விகிதம் 4.42 சதவீதமாகவும், இந்த வரத்தின் பாதிப்பு விகிதம் 4.02 சதவீதமாகவும் உள்ளது என்றும் நேற்றைய தினம் அதிகபட்சமாகக் கேரளாவில் 3,416 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன், இந்தியா முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 47 இலட்சத்து 86 ஆயிரத்து 160 ஆக உயர்ந்துள்ளதாகவும் இந்தியச் சுகாதாரத்துறை கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri