காரைதீவு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவருக்கு கோவிட்
காரைதீவு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் உட்பட 32 பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் ஒருவர் மட்டும் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த பரிசோதனைகள் இன்று (04) காலை இடம்பெற்றுள்ளன.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ சுகுணன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்லிமா வஸீர் அவர்களின் மேற்பார்வையின் கீழ் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ். வேல்முருகு , பொது சுகாதார பரிசோதகர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர், நுளம்பு கள தடுப்பு பிரிவினர் ஆகியோர் இணைந்து அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.
இந்தவார நடுப்பகுதியில் காரைதீவு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும்
உத்தியோகத்தர் ஒருவருக்கும், அவருடைய குடும்பத்தினர் மூவரும் கோவிட் தொற்றாளராக
அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.










6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
