இலங்கையில் 497 ஆண்களைப் பலியெடுத்த கோவிட்! - 304 பெண்களும் பலி
இலங்கையில் கடந்த 02ஆம் திகதியிலிருந்து இன்று வரை 103 கோவிட் தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்று தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, நாட்டில் இதுவரை 801 பேர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 497 பேர் ஆண்கள் எனவும் 304 பேர் பெண்கள் எனவும் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
இதேவேளை,கோவிட் தொற்றுக்கு எதிரான பைசர் தடுப்பூசியைக் கொள்வனவு செய்வதற்கான உடன்படிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி 900,000 பைசர் குப்பிகள் எதிர்வரும் ஜூலையில் இலங்கைக்குக் கிடைக்கும்.
49 லட்சம் குப்பிகள் அக்டோபர் மாதத்தில் கிடைக்கும் என்று அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபன தலைவர் வைத்திய கலாநிதி பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 4 நாட்கள் முன்
திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வரும் வினய் - விமலா ராமன்! வெளிநாடு ட்ரிப் புகைப்படங்கள் Cineulagam
ஜேர்மன் வனப்பகுதி ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள்: ரஷ்யா மீது சந்தேகம் News Lankasri